arulvakku

பிப்ரவரி 12 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 7:1-13

"இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது."

அருள்மொழி :

அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது".
மாற்கு 7:6

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் இயேசு "தீட்டு எது?" என்பதை அன்றும் இன்றும் உள்ளவர்களுக்கு விளக்குகின்றார். அதாவது நாம் எதை ஏற்றுக்கொண்டாலும் நல்லவையே. நாம் தரும் தீயவையை விட்டு ஒழித்தல் நல்லது. ஆனால் அடுத்தவரை ஒருவர், தன் அகத்திலிருந்து புறப்படும் தீச்சொற்களால் தான் மாசுபடுகின்றனர். அது தான் தீட்டாகும். கைகளைக் கழுவி உண்பதால் மட்டும் தீட்டு மறைவதில்லை. அடுத்தவர் மனம் புண்படச் செய்யாதவையே நலம் தரும் வார்த்தைகளாகும் என்கின்றார். எனவே நாம் மற்றவரின் வார்த்தைகளை எற்று நடப்போம்.

சுயஆய்வு:

  1. நான் அடுத்தவரை எப்படி நடத்துகின்றேன்?
  2. அடுத்தவருக்கு நான் தரும் மதிப்பு என்ன?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! பகட்டிற்காக மட்டுமன்றித் தூய நல்மனதோடு அடுத்தவரை அன்புச் செய்யும் மனம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org