arulvakku

பிப்ரவரி, 11 - திங்கள்

இன்றைய அருள்வாக்கு

யோவான் 2:1-11

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

அருள்மொழி :

இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்..
லூக்கா 5:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி இயேசுவின் தாய் மரியாளின் உடனிருப்பை எடுத்து கூறும் வண்ணமாக உள்ளது. இன்று திருஅவை லூர்து நகர் அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. கானாவூர் திருமணவீட்டில் அன்னை மரியாளின் பரிவிரக்கம், இயேசுவின் முதல் புதுமையை இவ்வுலகிற்கு வெளிக்கொணர்கிறது. இன்னும் "என் நேரம் வரவில்லை" என்று கூறியவர், தாய்ச் சொல்லைத் தட்டாமல் அங்கு நீரை இரசமாக்கி ஓர் அற்புத்தை நிகழ்த்தினார். தாயின் அன்பிற்கு அளவேது? தாயின் மீது அவர் கொண்ட அன்பிற்கும், மதிப்பிற்கும் சிறந்த எடுத்தூகாட்டுவேறு எதுவும் தேவையில்லை. தாய் தன் பிள்ளைகளைத் தேற்றுவதுபோல நம்மைத் தேற்ற வாக்களித்த இறைவனின் வார்த்தையின் நிறைவே அன்னை மரியாளுக்கும் நமக்கும் உள்ள உறவு. நிறைவும் மகிழ்வும் மிக்க வாழ்வே அது.

சுயஆய்வு :

  1. அன்னை மரியாளிடம் என் அன்பு எப்படி உள்ளது?
  2. அன்னையின் கரம்பிடித்து அவரைப் போல வாழ்ந்து காட்ட முயல்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நானும் அன்னை மரியாளிடம் உம்மைப் போல அன்பும் மதிப்பும் கொள்ள அருள் வரம் தாரும்.


www.anbinmadal.org