பிப்ரவரி, 10 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

லூக்கா 5:1-11

"அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்"

அருள்மொழி :

சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார்.
லூக்கா 5:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் முதல் சீடனைத் தேர்ந்துக் கொள்கிறார். அவர் சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். படிப்பறிவு இல்லாத சாதாரண மனிதரையே தன் முதல் சீடனாக ஏற்றுத் தனக்குப் பின் திருஅவையைக் கட்டிக் காக்கப் பணிக்கிறார். இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தன் இயலாமையை உணர்ந்திருந்தார். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள். மீனவரான பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார். நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்கப் பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.

சுயஆய்வு :

  1. பேதுருவைப் போல் நான் உமது அழைப்பை உணர்கிறேனா?
  2. எனது ஆணவமா? தற்பெருமையா ? அல்லது அறியாமையா?

இறை வேண்டல்:

என்னைக் காண உடலெடுத்த என் இறைவா மனிதரில் உன்னை காணும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org