அன்பின்மடல்

பிப்ரவரி 7- வியாழன்
இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:7-13

"மனம் மாறுங்கள்"

அருள்மொழி :

அப்படியே அவர்கள் சென்று மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்.
மாற்கு 6:7-13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்கள் வழியாகக் மக்களை மனம் மாற அழைப்பு விடுக்கின்றார். சீண்டிபார்க்கும் கும்பல் இன்றும் என்றும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படிபட்ட மக்களுக்கும் மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். ஏனெனில் திடீரென்ரு ஒருநாள் நாம் இவ்வுலகை விட்டுப் பிரியும் நிலை வரும். அப்போது எதையும் கொண்டு செல்லபோவதில்லை. எனவே எதை விதைக்கின்றோமா அதையே பலனாக எடுத்துச் செல்வோம் என்பதையே போதனையாக விடுக்கின்றார்.

சுயஆய்வு :

  1. நான் மனம் மாற முயற்சிக்கின்றேனா?
  2. அடுத்தவருக்கும் இதை பற்றி விளக்குகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் மனம் மாறி அடுத்தவருக்கு நற்செய்தியாக மாறிட வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org