பிப்ரவரி 4 - திங்கள்
புனித அருளானந்தர்

இன்றைய நற்செய்தி

யோவான் 12:24-26

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும்."

அருள்மொழி :

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 12:24

வார்த்தை வாழ்வாக:

இன்று திருஅவை புனித அருளானந்தர் நினைவைப் போற்றிக் கொண்டாடுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்." என்று கூறுகிறார். தன் சொந்த நாட்டிலிருந்து இந்திய மண்ணிற்கு வந்து, இறையரசை அறிவித்து, மக்களை மனம் திருப்பியப் புனித அருளானந்தர், மறைச்சாட்சியாக மரித்து, என்று அழியாப் புகழ் பெற்றுள்ளார். நாமும் அவர் வழியில் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. அருளானந்தரைப் போல நானும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கைக் கொள்கிறோனா?
  2. இயேசுவின் அழைப்பை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளும் என் முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! தமிழக மறைச்சாட்சி புனித அருளானந்தரைப் போல நானும் உம்மை பின்பற்றி வாழ வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org