பிப்ரவரி 3 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி

லூக்கா 4:21-30

" இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை."

அருள்மொழி :

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
லூக்கா 4:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு இக்கட்டான நேரங்களில் இறைவனின் துணையை இறுதிவரைக் தன் வாழ்வில் உணர்ந்தக் காரணத்தால்தான் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு துணிச்சலோடு தன் பணி வாழ்வில் முன்னேற முடிந்தது. அன்பே உருவான இறைவன் அன்புச் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இந்த அவனிக்கு வந்தார். அவர் இந்த அன்பே எடுத்துரைக்கும் பணியாளராக அன்று போல் இன்றும் திருமுழுக்கு மற்றும் மற்றத் திருவருட்சாதனங்கள் வழியாக நம்மையும் அழைக்கிறார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம்? சிந்தித்து நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள இறையருளை வேண்டி மன்றாடுவோம்.

சுயஆய்வு :

  1. இயேசுவில் என் நம்பிக்கை எப்படி உள்ளது?
  2. அந்த நம்பிக்கையை வளர்க்க எனது முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இறைவா! நாங்கள் உம்மை முழுமையாக அறிந்து உம்மில் நம்பிக்கைக் கொண்டு வாழ அருள் வரம் தர வேண்டுகிறோம்.


www.anbinmadal.org