arulvakku

பிப்ரவரி, 2 - சனி
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

இன்றைய நற்செய்தி

லூக்கா. 2:22-40

"என் கண்கள் கண்டு கொண்டன"

அருள்மொழி :

"ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன"
லூக்கா 2:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவைக் காணிக்கையாக்கும் போது நீதிமான் சிமியோன் எதிர் காலத்தில் மக்களின் துயர் அகற்றும் மீட்பர் இவர் தான் என்பதை அவரது கண்கள், குழந்தையின் 40-ஆம் நாளிலேயே கண்டுவிட்டதை முக்காலத்திற்கும் முத்திரைப் பதிக்கின்றார். எனென்றால் அவர் முற்றிலும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். இவர் வாயிலாக இறைவனின் மாட்சிமைக் குழந்தைப் பாலகனில் மிளிர்ந்தது. எனவே இறைமக்களாகிய நாம் இறைவன்பால் நம்மையே முழுமையாகக் கையளிக்கும் போது நம்மிலும் இறையருள் மிளிரும் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.

சுயஆய்வு :

  1. நான் குழந்தை இயேசுவைப் போல மாற என்ன செய்கிறேன்?
  2. அதற்காக நான் ஏற்கும் துயரம் என்ன?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மைப் பிறரின் துன்பத்தில் காணும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org