அருள்வாக்கு இன்று

ஜனவரி 31, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:21-23

இன்றைய புனிதர்

Saint John Bosco

புனித தொன்போஸ்கோ /

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது அவர்களுடைய தொழுகைகூடத்தில் தீயஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். மாற்கு 1:21-28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, கப்பர்நகூம் செபகூடத்திற்குச் செல்கின்றார். அங்குத் தீய ஆவிப் பிடித்திருந்தவன் இயேசுவைக் காண்கின்றான். அந்தத் தீய ஆவியானது இறைமகன் வந்துள்ளார். இங்கே நமக்கு வேலைக் கிடையாது எனப் பயந்து அவரிடம் பேசுகின்றது. அதனை அதிகாரத்தோடு புதிய தோரனையில் அதட்டுகின்றார். அதுவும் அவனை விட்டு விலகி ஓடியது. அங்கே தந்தையின் மாட்சிமை மிளிர்கின்றது. இதனைக் கண்டப் பரிசேயர்கள் தீய ஆவிக் கீழ்படிகின்றனவே என்று ஆச்சரியத்தோடு காண்கின்றனர். ஆம் சகோதரர்களே! நாமும் இறைப் பணிக்காக நம்மையே கையளிக்கும் போது தூய ஆவியானவர் நம்முன் ஆற்றலோடு மிளர்வார் என்பதை உணரவோம்.

சுய ஆய்வு

  1. நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாரா?
  2. ஆம் என்றால் இறையாசீர் என்னை ஆட்கொள்ளுமா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உம் பணியாற்ற என்னையே முழுமையாக அளிக்க நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு