அருள்வாக்கு இன்று
ஜனவரி 30, சனி
இன்றைய நற்செய்தி
மாற்கு 4:35-41
இன்றைய புனிதர்

ஏடன் புனித பாத்லிடிஸ்
மாற்கு 4:35-41
ஏடன் புனித பாத்லிடிஸ்
"பின் அவர்களை நோக்கி ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்று கேட்டார்." மாற்கு 4:40
இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் உடனிருப்பை மறந்து இருக்கும் தன் சீடர்களைக் கண்டிக்கின்றார். காரணம் இறைமகன் நம்முடன் இருப்பதை உணரதச் சீடர்கள் கடல் அலையைக் கண்டு அஞ்சுகின்றார்கள். ஆம் அன்பர்களே அன்றும், இன்றும் சரி இயேசுவின் வார்த்தைகள் நமக்குள்ளும் நாம் அவருக்குள்ளும் சகமித்து இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் என்றும் நம்மோடு இருக்கின்றார் என்பதே உண்மை. இதனை மறவாதீர்கள். நாம் பாவச் சூழலுக்கு உட்படும்போது இறையாசீர் நம்மிலிருந்து பிரிக்கப்படும். எனவே கவனமாகச் செயல்படுவோம்.
அன்பு இயேசுவே! வல்லவரே நான் என்றும் உம்மோடு இருக்க வரம் தாரும். ஆமென்.