அருள்வாக்கு இன்று

ஜனவரி 27, புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 4:1-20

இன்றைய புனிதர்

 Saint Angela Merici

புனித ஆஞ்ஜேலா மெரிசி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" மாற்கு 4:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தைக் குறிப்பிடுகின்றார். இறைவார்த்தை என்றாலே ஒரு மனிதன் தன் வாழ்வை எவ்வாறு வாழ்ந்து அடுத்தவரையும் வாழ வைக்கின்ரானோ அதுவே நற்செய்தியாகும். இறைமகன் வெளிப்படுத்துகின்றவைகள் அனைத்தும் மானிடச் சமுதாயம் நிலை வாழ்வுப் பெறும் பொருட்டே என்பதை ஏற்று அதன்படி வாழ்பவர்களைத் தான் இயேசு இவ்வாறு குறிப்பிடுகின்றார். அவரது இறைவார்த்தைகளைக் கேட்டு ஒன்றுக்கு நூறாகப் பலன் தரும் இறைமக்களைத் தான் இங்கே குறிப்பிடுகின்றார். இதற்காகத் தான் பல உவமைகளைக் கொண்டு விளக்குகின்றார். இறைவார்த்தையின்படி வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஏற்போம்.

சுய ஆய்வு

  1. இறைவார்த்தைகள் ஆற்றல் மிக்கவை என்பதை உணர்கின்றேனா?
  2. அவற்றை உணர்ந்து அடுத்தவருக்குச் செயலினால் பகிர்ந்துக் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்துக் காட்டும் பண்பட்ட நிலமாக என்னை மாற்றியருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு