அருள்வாக்கு இன்று
ஜனவரி 22, வெள்ளி
இன்றைய நற்செய்தி
மாற்கு 3:13-19
இன்றைய புனிதர்

புனித வின்சென்ட் பல்லோட்டி
மாற்கு 3:13-19
புனித வின்சென்ட் பல்லோட்டி
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்றவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னுடன் பணியாற்றப் பன்னிரு சீடர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களுக்குப் பெயரிடுகின்றார். அவர்களுக்கு நற்செய்தியைப் போதிக்கவும், பேய்களை ஓட்டும் அதிகாரத்தையும் அளிக்கின்றார். இந்தப் பன்னிருவரைக் கொண்டு தான் கிறித்துவ மதத்தை உலகளாவிய ஒரு சமயமாகத் தோற்றுவித்தார். பூமியின் ஒரு கோடி முனை முதல் மறுகோடி முனை வரை ஒரே குரல் ஒலிக் கேட்க வேண்டும் என்பதே இவரது ஆவல். இதையே நமக்கும் அழைப்பு விடுக்கின்றது. அவரது திருமுழுக்கினால் அவரது மறையுடலாயிருக்கின்றோம். எனவே அவரது மீட்புப் பணியும் நம்மையே சாரும் என்பதை உணர்ந்திடுவோம்.
அன்பு இயேசுவே! உமது மறையுடலாகிய நான் என்றும் உமது அழைப்புற்கேற்றப் பணிச் செய்ய வரம் தாரும். ஆமென்.