அருள்வாக்கு இன்று

ஜனவரி 19, செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற். 2:23-28

இன்றைய புனிதர்

Saint Fabian

புனித ஃபபியான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை."

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, ஓய்வு நாள் பற்றிய தெளிவு தருகின்றார். அன்று திருசட்டத்தின் பெயரால் மக்களைத் துன்புறுத்திய நேரம் அது. எனவே தான் இயேசு ஓய்வு நாளில் மனிதனுடைய தேவைகளை நிறைவுச் செய்யலாம் (உம்.) நோயுற்றாலோ, பசியுற்றாலோ மனிதனின் தேவைகள் பூர்த்திச் செய்ய்பபட வேண்டுமே தவிர, அதனை மறுத்து மனிதன் துன்புற்று ஓய்வு நாளை கழித்தல் சரியன்று என்று இயேசு அன்றும் இன்றும் நமக்கு உணர்த்துகின்றார். அனைத்து வசதிப் படைத்தோர் ஓய்வுநாளைச் சரியான முறையில் கழிப்பதாக நினைப்பர். ஆனால் ஏழைகளோ அவர்கள் பணிச் செய்தால் அன்றாட உணவு என்ற நிலை உண்டு. இதனை வலியுறுத்தவே இயேசு ஓய்வுநாளைப் பற்றி விவரிகின்றார்.

சுய ஆய்வு

  1. ஓய்வு நாள் என்பது என்னவென்று உணர்ந்துள்ளேனா?
  2. உணர்ந்து அந்நாளை எவ்வாறு வாழ முயற்சிக்கின்றேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எல்லாரும் எல்லாம் பெற்று இன்புற வேண்டிய வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு