அருள்வாக்கு இன்று

ஜனவரி 17, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 1:35-42

பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு
இன்றைய புனிதர்

அங்கேரியின் புனித மார்கரேட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் 1:39

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைக்கின்றார். யோவான் அவரது இரு நண்பர்களும் அவரோடு சென்றார்கள். இயேசு அவர்களை நோக்கி என்னோடு வந்து பாருங்கள் என்று அழைக்கின்றார். வந்து பாருங்கள் என்பது இறைமகனின் ஆற்றல் மிக்கத் தன் தந்தையின் பொருட்டு மண்ணின் மானிடரை மீட்டெடுக்க வந்தார். அவருடன் உடன் பணியாற்ற முதல் சீடர்களைத் தேர்ந்து கொள்கின்றார். அவர்களது அழைப்பு இன்று உலகம் முழுவதுமாய்க் கிறித்துவம் ஓங்கி நிற்பது. இந்தத் தேவ அழைப்பால் தான் வந்து பாருங்கள், எனது தந்தையின் மாட்சிமையில் நீங்களும் அகமகிழ்வு கொள்ளுங்கள். நீதியின் ஆட்சியை இவ்வுலகம் பெறும் பொருட்டே நான் இவ்வுலகிற்கு வந்தேன். என்னோடு சேர்ந்து இறைபணியாற்றவே அழைக்கின்றேன் என்று அன்றும் இன்றும் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. “வந்து பாருங்கள்” என்றதன் பொருள் அறிகிறேனா?
  2. என் அழைப்பை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மில் நான் தொடர்ந்து பணியாற்ற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு