அருள்வாக்கு இன்று

ஜனவரி 16, சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 2:13-17

இன்றைய புனிதர்

புனித ஜோசப்வாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். மாற்கு 2:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பாவிகளோடும், வரித்தண்டுபவர்களோடும் விருந்து உண்கின்றார். எப்படிஎனில் அவரது மண்ணகப் பயணம் இத்தகையோருக்கே என்பதை அறியாத மறைநூல் அறிஞர்கள் இவ்வாறு பேசுகின்றனர். இதற்கு மறுமொழியாகதான் நோயுற்றவனுக்குத் தான் மருத்துவம் தேவை என்றும் சாடுகின்றார். தவறு செய்பவர்களை அவர்களது இன்பதுன்பங்களில் நாம் பங்கேற்கும் போது அவர்கள், அவரது தவறை உணர்ந்து மனம் மாறி நற்பணி ஆற்றமுற்படுவார்கள். பாவிகள்- குற்றவாளிகள் என்று இனம் பிரிக்கப்படும்போது மென்மேலும் தவறு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே தான் இயேசு நமக்குப் பாடம் புகட்டுகின்றார். நான் இவ்வுலகில் எதையெல்லாம் செய்தேனோ அதையெல்லாம் நீங்களும் செய்யுங்கள் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. என் புரிதல் எவ்வாறு உள்ளது?
  2. நான் எவ்வாறு இதைச் செயல்படுத்துவேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நின் பணியை யாம் செய்ய எமக்குப் போதிய வரங்களை அருள மன்றாடுகின்றோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு