அருள்வாக்கு இன்று
ஜனவரி 14, வியாழன்
இன்றைய நற்செய்தி
மாற்கு 40-45
இன்றைய புனிதர்

அருளாளர் தேவசகாயம்
மாற்கு 40-45
அருளாளர் தேவசகாயம்
உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். மாற்கு 1:42
இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளரைக் குணப்படுத்துகிறார். நோயாளியோ 'இயேசுவிடம் சென்றால் நான் குணம் பெறுவேன்” என்று முழுநம்பிக்கையோடு வந்து 'ஐயா விரும்புகிறேன் என்னைக் குணப்படுத்தும்” என்று விசுவாசத்தோடு கேட்கின்றான். எனவே குணம் பெறுகின்றான். ஆம் அன்பர்களே, நாம் முழுமனதோடு, குணம் பெற்று விடுவோம் என்று இறைமகனை ஏறெடுக்கும் போது அனைத்தும் நமக்குக் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். நமது விசுவாசம் நம்மைக் குணப்படுத்தும், நாமும் அடுத்தவருக்கு இயேசுவின் நாமத்தினால் விரும்புகின்றாய், குணம் பெறு! என்று இறைமகனை நம்மில் கொண்டு செயலாற்றும்போது எல்லாம் கூடும். இதை நமது உள்ளத்தில் வைத்தல் அவசியம். கடமைக்காக இல்லாமல் இறைவனின் திட்டத்தை மனதில் கொண்டு பணிச் செய்ய நமக்கு இறைமகன் அறைவல் விடுகின்றார்.
அன்பு இயேசுவே! உமது ஞானத்தை எம்மில் பொழிந்து உம் பணியாற்ற எனக்கு ஆற்றலைத் தாரும். ஆமென்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!