அருள்வாக்கு இன்று
ஜனவரி 12, செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மாற்கு 1:21-28
இன்றைய புனிதர்

புனித பெனடிக்ட் பிஸ்கோப்
மாற்கு 1:21-28
புனித பெனடிக்ட் பிஸ்கோப்
"வாயை மூடு: இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். மாற்கு 1:25
இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவிபிடித்தவனை நோக்கித் தன் அதிகாரத்தோடு அதட்டி அந்த மனிதனிடமிருந்து வெளியேற்றுகின்றார். எப்படிஎனில் அவர் தந்தையின் ஆற்றலையும், தூயஆவியை முழுமையாகப் பெற்றிருந்தார். எனவே அந்தப் பேய் அவரைக் கண்ட மாத்திரத்தில் அவரை யார் என்று அறிந்திருந்தது. எனவே அவனை விட்டு விலகிபோயிற்று. ஆம் சகோதரர்களே! நாமும் திருமுழுக்கினாலும் அருளடையாளங்களாலும் தூய ஆவியின் கனிகளைப் பெற்றுள்ளோம். இதனை நம்முள் தக்க வைத்துக் கொள்ள மறந்துவிடுகின்றோம். பல தகாத செய்களால் நம்மையே இழந்து விடுகின்றோம். எனவே கோழைகளாக மாறிவிடுகின்றோம். எனவே இயேசுவின் கனவை நனவாக்க வேண்டுமானால் நாமும் இயேசுவைப் போல் தூய ஆவியானவரின் வரங்களைப் பெற்று நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்குப் பணியாற்றுவோம். அன்றே இறையாட்சி மண்ணில் மலரும்.
ஆவியானவரைத் தக்க எனது முயற்சி யாது?