அருள்வாக்கு இன்று

ஜனவரி 11-திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:14-20

இன்றைய புனிதர்

Saint Theodosius the Cenobiarch

புனித தியோடோசியஸ் செனொபோர்க்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். மாற்கு 1:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இவ்வுலகப் பயணம் எதற்காக வந்தாரே அப்பணிக்குத் தேவயான பணியாட்களுக்கு அழைப்பு விடுக்கினறார். அழைப்புப் பெற்றவர்கள் எந்த மாறுகருத்தும் கூறாமல் இயேசுவைப் பின் தொடர்கின்றனர். அன்று அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்து அவரது ஆசியைப் பெற்றுப் பணிச் செய்ததினால் தான் இன்று கிறிஸ்துவம் உலகெங்கும் வேருன்றி இருக்கின்றது. அன்பார்ந்தவர்களே! அன்று இயேசு எந்த விதப் பொன்னோ- பொருளோ கொண்டு தன் சீடர்களைத் தேர்ந்துக் கொள்ளவில்லை. தன் தந்தையின் அருட்கொடைகளை மட்டும் பெற்று உலகலாவிய சமயத்தைத் தோற்றுவித்தார். அவ்வாறே நம்கும் அழைப்பு விடுக்கின்றார். எந்த வித நிபந்தனையற்ற அழைப்பு அன்பு என்ற வித்தை இவ்வுலகில் அயலானுக்கும் ஊன்ற நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா!

சுய ஆய்வு

  1. திருமுழுக்கினால் இயேசுவின் மறையுடலாகிய நான் என்னவாக உள்ளோன்?
  2. என்னுள் கிடக்கும் தீயவற்றை அகற்றி மற்றவரை அன்புச் செய்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் அழைப்பு எங்களுக்கு நல் சிந்தனைகளை அளித்து எம்மைச் சுற்றியுள்ளவருக்கு அன்புக் காட்ட வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு