அருள்வாக்கு இன்று
ஜனவரி 10, ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மாற்கு 1:7-11
ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு
மாற்கு 1:7-11
ஆண்டவரின் திருமுழுக்கு
அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. மாற்கு 1:7-11
இன்றைய நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெறுகின்றார். தண்ணீரை விட்டு வெளியேறுகையில் வானத்திலிருந்து ஒரு குரல் "இவரே என் அன்பார்ந்த மகன்" என்று தன் மகனை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றார். இங்கே இருவரும் கபிரியேல் வானத்தூதரால் இறைவாக்குப் பெற்றவர்கள். இங்கு இருவரின் வருகை இந்த உலக மானிடரின் குறைகளைப் போக்க வந்த செம்மறியாகத் திகழ்கின்றனர். இயேசு, திருமுழுக்கு யோவான் வழியாகத் தந்தை தன் மாட்சிமையை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதனை நமது வாழ்விலும் அடுத்தவருக்குப் பணியாற்றும் போது நாமும் இறைவனின் மாட்சியில் பங்குபெறலாம்.
அன்பு இயேசுவே! நான் உமது மாட்சிமையில் வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்.