அருள்வாக்கு இன்று

ஜனவரி 8, வெள்ளி

இன்றைய நற்செய்தி

லூக்கா 5:12-16

இன்றைய புனிதர்

 Saint Apollinaris the Apologist

புனித அப்பொலினாரிஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. லூக்கா 5:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தொழுநோயாளி ஒருவனுக்குத் தொழுநோயைக் குணமளிக்கின்றார். ஏன்? எப்படி? பல நாள்கள் நோயின் பிடியிலிந்த அவனுக்கு வேதனையின் உச்சக்கட்டம் நம்பிக்கைக் குன்றாமல் இறைமகன் நம்மைக் குணப்படுத்துவார் என்ற இறைவார்த்தையே தன வாழ்வு என்று நம்பித் தன்னை இறைமகனிடம் ஒப்படைக்கின்றான். குணம் பெறுகின்றான். ஆம் சகோதரசகோதரிகளே! விரும்பிய நேரத்தில் விரும்பியவருக்கு அளிக்கும் பேருபகாரி. அவரது வார்த்தைகளை - போதனைகளை நாம் நமது வாழ்வில் செயல் வடிவம் கொடுக்கும்போது அனைத்தையும் பெறுவோம் - பெற்றுவிட்டோம் என்ற விசுவாசம் நம்மில் ஊன்றப்படும் வேளையில் அவரது மீட்பில் பங்குப் பெறுகின்றோம். நாம் இயேசுவிலும் இயேசு நமது நாவிலும் குடிக்கொண்டிருக்கும் போது எல்லாம் எளிதாகி விடும்.

சுய ஆய்வு

  1. என்னில் நான் இயேசுவைக் காண்கின்றேனா?
  2. அல்லது அவரது பணியில் என்னை அர்ப்பணிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்புக் குழந்தை இயேசுவே! அன்று தொழுநோயைக் குணப்படுத்தியது போல இன்று அனேகரின் கொரோனா நோய்களை அகற்றியருள மன்றாடுகின்றோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு