அருள்வாக்கு இன்று
ஜனவரி 6, புதன்
இன்றைய நற்செய்தி
மாற்கு 6:45-52
இன்றைய புனிதர்

புனித ஆந்திரே பெசெத்
மாற்கு 6:45-52
புனித ஆந்திரே பெசெத்
ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது. மாற்கு 6:52
இன்றைய நற்செய்தில் மக்கள் வயிராற உண்டதினால் மழுங்கிய நிலையில் இருந்தனர். எனவே தான் இறைமகன் கடல் மீது நடந்து வருவதை அவர்களால் உணர்ந்துக் கொள்ளமுடியவில்லை. அவாகள் இவ்வுலகக் காரியங்களிலேயே மூழ்கிக் கிடந்தார்கள். இறைபிரசன்னத்தின் மாட்சியை அவர்களால் உணர முடியவில்லை. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற இன்றைய பழமொழிக்கேற்பத் தன் நிலையை மறந்து இருந்தார்கள். ஆம் சகோதர சகோதரிகளே இன்றும் நாம் செய்நன்றியை மறந்தவர்களாக உள்ளோம். நமது தேவைகளை எப்படியாவது பற்றிட வேண்டும். அஃது எவ்வழியில் கிடைத்தாலும், தனக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று நிலையில் எத்தனை பேர் வாழ்கின்றோம் என்பதைச் சிந்திப்போம். சுயநலம் என்ன என்பதை உணர்வோமா?
அன்பு இயேசுவே! இன்றைய உலகில் என்னையும் உமது இறையாட்சியின் ஒரு வித்தாக மாற்றிட வரம் தாரும். ஆமென்.