அருள்வாக்கு இன்று

ஜனவரி 5, செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:34-44

இன்றைய புனிதர்

 Saint John Neumann

புனித ஜான் நியுமேன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அனைவரும் வயிறார உண்டனர். மாற்கு 6:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவின் போதனைளையும், அவர் செய்தப் புதுமைகளையும் காணத் திரளான மக்கள் அவரே நோக்கி வந்தனர். அது பாலைவனமாக இருந்ததினால் மக்கள் பசிப் போக்க அங்கு எதுவும் இல்லாதநேரத்தில் சீடர்கள் இறைமகனிடம் முறையிடுகின்றனர். ஆனால் இயேசுவோ தங்களிடம் இருப்பதைக் கொண்டு பெண்கள், குழந்தைக் நீங்கலாக ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கினார். மீதியை 12 கூடைகளில் நிறைத்தனர். மக்கள் மனநிறைவோடு உண்டு மகிழ்ந்தனர். ஆம் இறைமக்களே! இயேசு நமக்குள்ளும் நாம் அவருக்குள்ளும் சங்கமிக்கும் போது இவ்வுலகப் பசி நம்மை வருத்தாது. துன்புறுத்தாது. எனவே இறைவார்த்தையை வாசிப்போம் தியானப்போம். சுவாசிப்போம். செயல்படுத்தி வாழ்வாக்குவோம். அன்றே இறைமகனில் நமது சங்கமம் நிகமும்.

சுய ஆய்வு

  1. இறைவார்த்தையை நான் வாசிக்கின்றேனா?
  2. அதனைக் கொண்டு என் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்க்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் எனது உயிர்மூச்சாகட்டும் என்ற சிந்தனையை எனக்குள் பதித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு