அருள்வாக்கு இன்று

ஜனவரி 4-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 4:12-17,23-25

இன்றைய புனிதர்

Saint Elizabeth Ann Seton

புனித எலிசபெத் ஆன் செடோன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

காரிருளில் இருந்த மக்கள் போரோளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது மத்தேயு 4:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் தன் இவ்வுலக வரவின் முத்தாய்ப்பாக முதன்முதலாக கலிலேயாவில் தன் பணியை தொடர்கின்றார். அடிமைவாழ்வு- நோயுற்றோர்- துன்பச் சூழலில் வாழ்வோர் அனைவரின் துயர் துடைக்க முதல் கட்டமாக செபுலோன்,நபதலி-யோர்தான் போன்றவர்கள் வாழ்ந்து சாவின் பிடியிலிருந்தவர்களுக்காக அவரது பணி தொடர்கின்றது. அன்றே "மக்கள் பேராளியைக் கண்டார்கள்." ஆனந்தம் கொண்டார்கள். அவரது பணிக்கு தேவையானவர்களையும் இனம் கண்டுக் கொண்டார். எனவே இறைமக்களே இன்றும் நாம் பாவமென்னும் இருளில் மூழ்கி இறைபிரசன்னம் கிடைக்கபெறாமல் அனேகர் வாழ்கின்றோம். நம் குற்றம் குறைகளை கலைந்து மழலை மன்னவனின் பாதம் சரணடைந்தால் நாமும் இறைமகனின் பேராளியை கண்டுணர்வோம்.

சுய ஆய்வு

  1. இறைமகன் பிறப்பின் இலட்சியத்தை உணர்ந்துள்ளேனா?
  2. உணர்ந்ததை மற்றவருக்கும் அளிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! திருமுழுக்குக்கின் வழியாக நான் பெற்றுக் கொண்ட வரங்களையும், உமது மறையுடலின் ஒரு சிறு துளி என்பதை நான் உணர வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு