ஜனவரி 26 - சனி

இன்றைய நற்செய்தி:

லூக்கா 10:1-9

"ஓநாய்களுக்கிடையே அனுப்புகின்றேன்."

அருள்மொழி:

புறப்பட்டு போங்கள், ஓநாய்களுக்கிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல் உங்களை நான் அனுப்புகின்றேன்.
லூக்கா 10:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் அன்புச் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்புகின்றார். அவரது உள்ளமோ அதிகத் துயரத்தில் இருந்ததால் வந்த வார்த்தையாக உள்ளது. காரணம் அன்றும் சரி இன்றும் சரி வெறியாட்கள், தீவிரவாதம், ஆதிக்க சக்திகள் நிறைந்து மக்களைச் சிறுமைப்படுத்துகின்ற நிலை மேலோங்கி நிற்கின்றது. இந்த ஓநாய்களிடையே ஆட்டுகுட்டிகளைப் போல் அனுப்பபடுகின்ற தன் சீடர்களைப் பார்த்துப் பதறிச் சொல்கின்றார். ஆம் சகோதரிகளே! நாம் பயணிக்கின்ற இந்த உலகம் பல பிரச்சனைகளை உள்வாங்கி உள்ளது.எந்த நேரத்தில் எதுவும் நடக்கும் என்ற அச்சமும் உள்ளது. எனவே நாம் நம்மை இறைவன் பால் ஊன்றச் செய்து பணியைத் தொடருவோம்.

சுயஆய்வு :

  1. நான் எந்த நிலையிலும் பணிச் செய்யத் தயாரா?
  2. அப்படியானால் என் தயார் நிலை என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் சீடர்களைப் போல் நாங்களும் உம் பணிச் செய்ய வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org