ஜனவரி 24 - வியாழன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 3:7-12

"தம்மை வெளிபடுத்த வேண்டாமென கூறினார்."

அருள்மொழி:

'அவரோ, தம்மை வெளிபடுத்தவேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய் சொன்னார்..
மாற்கு. 3:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அனைவரும் குணப்படுத்திச் செல்கையில் தீய ஆவிகள் அவரைக் கண்டு அவர் முன் மண்டியிட்டு இறைமகன் நீரே எனக் கத்தியதைக் கண்ட இயேசு என்னை யார் என்று வெளிபடுத்த வேண்டாம் என்று தீய ஆவிகளிடம் கண்டிப்பாகக் கூறுகின்றார். காரணம் அவரது வருகை நலிந்த மக்களைக் கரைச் சேர்க்க வேண்டும், ஏற்றத் தாழ்வில்லாச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும். தாம் எதற்காக வந்தாரோ அவ்வேளை முடியாத நிலையில் தீய ஆவிகள் அவர் தான் இறைமகன் என்று கத்துவதைக் கண்டிக்கின்றார். இன்னும் பல இடங்களுக்குச் சென்று பல நல்ல செயல்களைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் இருந்தார். எனவே தான் அவற்றைக் கண்டிக்கின்றார்.

சுயஆய்வு :

  1. இறைமகனை நான் உணர்ந்து கொள்ள நான் தயாரா?
  2. இல்லையேல் என்னை எப்படி தயாரிப்பது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் உம்மை அறிந்து உம்மில் கலந்து நின் பணியாற்றும் ஆற்றலை தாரும். ஆமென்.


www.anbinmadal.org