ஜனவரி 21 - திங்கள்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 2:18-22

"உடனிருப்பு"

அருள்மொழி:

"அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா?"
மாற்கு. 2:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நறசெய்தியில் நற்செய்தியாளர் மாற்கு இயேசுவின் உடனிருப்பை நினைவு கூறிகின்றார். சீடர்களோடு மனுமகன் இருக்கின்றார். அவரது உடனிருப்பு அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது. அவர்கள் எதைச் செய்யவும் ஆற்றல் அவர்களுக்குள் இருக்கின்றது. எனவே தான் பரிசேயர்கள் கேட்கும் கேள்விக்கு இறைமகன் தனது இருத்தலை உணர்த்துகின்றார். அதை உணரமுடியாத பாவிகள் கேள்வித் தொடுக்கின்றனர். ஆம் அன்பர்களே! நாம் அவருள்ளும் அவரது வார்த்தைகள் நமக்குள்ளும், நமது வாழ்விலும் இணையும்போது நாமும் எந்தவித நோன்புகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்பதே இதன் கருப்பொருள். இன்று நாம் இறைமகனின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் கடைபிடிப்போம். அவரது இருத்தலை உணருவோம்.

சுயஆய்வு :

  1. இருத்தலாகிய இயேசு என்னுள் இருப்பதை உணர்கின்றேனா?
  2. உணர்ந்து அதனை வாழ்வாக்கிட எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது இருத்தலை என்னுள் பதிவு செய்யும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org