ஜனவரி 19 சனி

இன்றைய நற்செய்தி:

மாற்கு. 2:13-17

"அழைப்பு"

அருள்மொழி:

"இயேசு இதை கேட்டவுடன் அவர்களை நோக்கி, நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவம் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
மாற்கு. 2:1

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வருகை எத்தகையோருக்கு என்பதை விளக்குகின்றார். அதாவது சமுதாயத்தில் நொறுங்குண்டு யூத ஆதிக்கத்தினரால் புறந்தள்ளப்பட்டுப் பாவிகள் என்று முத்திரைக் குத்தப்பட்ட வறியோருக்காகவே நான் வந்தேன். மருத்துவர் என்பது நோயாளிக்குத் தான் என்பதை விளக்குகின்றார். இன்றும் நம்மை ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். எங்கும் சாதிவெறி, சமயவெறி, தீவிரவாதம், களியாட்டம் போன்ற வெறிச் செயல்களால் மக்கள் சிதறுண்டுக் கிடக்கின்றனர். குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் மனித இனம். இதனைச் சீர்தூக்கிப் பார்க்க இன்று அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா?

சுயஆய்வு :

  1. அழைப்பு என்பது எப்படிபட்டது, எதற்காக என்பதை உணர்கின்றேனா?
  2. இதனை மேற்கொள்ள எனது மனநிலை என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது அழைப்பின் மேன்மையை உணர்ந்து உம் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org