ஜனவரி 18 வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மாற்கு. 2:1-12

"பாவங்கள் மன்னிப்பட்டன"

அருள்மொழி:

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள்
மாற்கு. 2:1-6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இன்னொரு முடக்குவாதமுற்றவரை பார்த்து "மகனே உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறிகின்றார். அவன் எப்படி நோயாளி ஆனான்? என்பதை அவரது வார்த்தையிலிருந்தே நாம் அறிந்துக் கொள்ளலாம். முடக்குவாதம் இன்றும் அனேகர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்விலிருந்து, பாவச் சுமைகள் நம்மில் தாக்கப்படும்போது வாதம் முட்டுகளில் தேங்கி மனிதன் பாதிக்கபடுவதும் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. எனவே சகோதரர்களே நோயும் நமது நற்செயல்களுக்கு ஏற்றார் போல் அமைவதைக் காண்கிறோம். இயேசு பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொன்னதும் அவன் பிணி அவனை விட்டு விலகியது என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம்.

சுயஆய்வு :

  1. பாவம் என்றால் என்ன என்பதை நான் உணர்க்கின்றேனா?
  2. உணர்ந்து அதனை விலக்க எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் தவறு செய்யும்போது ஏன் செய்கின்றேன்? என்பதை உணரும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org