arulvakku

ஜனவரி 17 வியாழன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:40-45

"குணம் அடைந்தான்"

அருள்மொழி:

உடனே தொழுநோய் அவரை நீங்க அவர் நலமடைந்தார்.
மாற்கு 1:45

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளியைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். ஏனெனில் தொழுநோயாளர்களைக் குணப்படுத்தி வருகையில் ஒருவரை 'நான் விரும்புகிறேன். நோய் நீங்குக" என்கி்றார். இங்கே தொட்டுக் குணப்படுத்துகின்றார். இரண்டையும் சற்றுக் கூர்ந்து கவனிப்போமானால் சாதரணமாக நோயாளிகளைத் தொடுவதற்கு அன்றும் இன்றும் அனேகர் முன் வருவதில்லை. தொற்றி விடுமோ என்ற ஆதங்கம். ஆனால் இயேசு அவரைத் தொட்டுக் குணப்படுத்தி அவருக்குள் முடங்கிக் கிடந்த தாகத்தைத் தணிக்கின்றார். உன்னையும் நான் நேசிக்கின்றேன் கலங்காதே! என் செயல்களையும் பின்பற்றிப் பலர் நலம் பெறுவார்கள் என்றார். நம்மையும் உடல் நலம் குன்றியோரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாய் இருக்க இயேசு அழைப்பு விடுக்கின்றார்.

சுயஆய்வு :

  1. நோயாளிகளுக்கு நான் என்ன செய்ய விரும்புகின்றேன்?
  2. எனது பணி இறைவனில் கலந்துள்ளதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வல்லமையைக் கொண்டு நானும் நின் பணி செய்ய வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org