arulvakku

ஜனவரி 16 புதன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:29-39

"இறைவனிடம் வேண்டினார்"

அருள்மொழி :

"இயேசு விடியற்காலை கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்கு புறப்படுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்".
மாற்கு 1-35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தனிமையில் இறைவனோடு அதிகாலை நேரத்தில் உரையாடுகின்றார். தான் வந்துள்ள இந்த மண்ணகம் பல சோதனைகளைக் கொண்டுள்ளது. இதனை வெல்ல வேண்டுமானால் தந்தையின் அருள் அவருக்கு தேவைப்பட்டது. எனவே தான் அதிகாலை செபம் இறைவனுக்கு உகந்த நேரம். எனவே தான் ஒவ்வொரு நாளும் செய்ய போகின்ற பணிக்கு முத்தாய்ப்பாகக் தந்தையின் ஆசிரோடு செய்கின்றார். ஆம் அன்பர்களே! நமக்கும் இது ஒரு சான்று. நாம் பெயரளவில் செபம் செய்தால் மட்டும் போதாது. நாம் இறைவனை நமக்குள் தாங்கிச் செல்லும்போது தான் எல்லாம் நிறைவேறும் என்பதற்கு இயேசுவின் செபம் நமக்கு சான்றாக அமைகின்றது. இதனை நாமும் கடைபிடிப்போமா?

சுயஆய்வு:

  1. நான் இயேசுவை பற்றிக் கொள்கின்றேனா?
  2. அவருடைய துணை பல வல்லச் செயல்களை எனக்குள் செய்யும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மை என்றும் பற்றிக் கொண்டு நீர் விட்டு சென்ற இறையாட்சியின் கருபொருளை அடையும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org