arulvakku

ஜனவரி 15, செவ்வாய்
பொங்கல் திருவிழா

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:21-28

பேயை விரட்டினார்"

அருள்மொழி :

'வாயை மூடு; இவரை விட்டு வெளியேபோ" என்று இயேசு அதனை அதட்டினார்.
மாற்கு 1:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தீயஆவியை கண்டிக்கின்றார். தீய ஆவி இறைமகன் என்பதை கண்டுகொண்டு என்னை ஏன் சோதிக்கின்றீர் என கூறுகிறது. எனவே இயேசு அதனை, வெளியேறும்படி கடிந்துக் கொள்கின்றார். உடனே தீயஆவி அவனை விட்டு விலகிற்று. இதனை கண்டவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பேய்களும் அடிப்பணிகின்றனவே என்று திகைத்து போயினர். ஆம் அன்பர்களே! இயேசுவின் விழுமியங்களை நாமும் தயக்கமின்றி தூய ஆவியாரின் ஆற்றலோடு அடுத்தவரின் நலனில் தடம் பத்திக்கும் போது நமக்குள் இருக்கும் சுயம்புவாகிய இறைவன் செயல்படுவார் என்பது உறுதி. எனவே இறையாட்சியின் வித்துக்களாக நாம் மாற நம்மையே முதலில் தெளிவுப்படுத்திகொள்வோம். இக்கால சூழலுக்கு ஏற்றவாறு விவிலியத்தை மறுவாசிப்பு செய்வோம். சாத்தானை முறியடிப்போம்.

சுயஆய்வு:

  1. தீய ஆவியை விரட்ட எனது முயற்சி என்ன?
  2. என்னில் இயேசுவை எவ்வாறு பதிவு செய்வேன்?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நிலையற்ற உலகில் நிலையான வாழ்வை அடைய எனக்கு தெளிவுகளை வழங்கியருள மன்றாடுகின்றேன். ஆமென்.

பொங்கல் வாழ்த்துக்கள்


www.anbinmadal.org