arulvakku

ஜனவரி 14
முத்திபேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை

இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:14-20

"என் பின்னே வாருங்கள்"

அருள்மொழி :

இயேசு அவர்களை பார்த்து 'என் பின்னே வாருங்க: நான் உங்களை மனிதரை பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.
மாற்கு 1:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டபின் கடவுளின் நற்செய்தியைப் பறைச்சாற்றிக்கொண்டே கலிவேயாவிற்கு வந்த இயேசு மக்களுக்கு மனமாறிட அழைப்பு விடுக்கின்றார். நம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறிவிக்கும் பணியே செய்ய தூண்டுகிறார். பிளவுகள் மலிந்து கிடக்கும் இவ்வுலகினை சரி செய்யவே நம்மை இங்கே தகுதியுள்ளோர்களாக மாறவும் அழைக்கின்றார். இந்த அழைப்பு அனைத்து மானிடருக்கே என்பதை மறவாமல் இறையாட்சி பணிக்கு நம்மை தயார் படுத்துவோம். வாரீர்.

சுயஆய்வு :

  1. அழைப்பு எத்தகையது என்பதை அறிந்துள்ளேனா?
  2. அறிந்ததை மற்றவருக்கும் தெளிவுபடுத்த முயற்சிக்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நானும் உமது பணியாற்ற தேவையான அருள் வரங்களை தாரும். ஆமென்.


www.anbinmadal.org