arulvakku

ஜனவரி 12 - சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 3:22-30

"யோவானின் கொள்கை"

அருள்மொழி :

"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும் எனது செல்வக்கு குறையவேண்டும்" என்றார்..
யோவான் 3:30

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் இயேசுவை பற்றி யோவான் அவர் முன்பு "நான் ஒரு சிறு பதர். அவரது மாட்சிமை மிளிரவேண்டும், நான் குறையவேண்டும். ஏனெனில் இறைவனின் மைந்தன் அவரே! அவரே மெசியா" என்று வீரமுழக்கமிடுகின்றார். இங்கே யார் பெரியவர், யார் மெசியா என்று தெரியாது புலம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு உண்மை இறைமகனை தெளிவு படுத்துகின்றார் புனித யோவான். தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யவே இவ்வுலகிற்கு வந்தவர் தான் மெசியா என்பதை பதிவு செய்கின்றார். எனவே தன் இயேசுவின் முன் பிறந்தாலும் "என் செல்வாக்கு குறைய வேண்டும், அவரது மாட்சிமை ஒளிரவேண்டும்" என்கின்றார். ஆம் சகோதரர்களே! நாமும் இறைமகனின் ஆற்றலில் பணி செய்யும்போது தூய ஆவியானவரின் ஆற்றல் வெளிபடும். நாம் குறைய வேண்டும்; நம்மில் இறைதன்மை வெளிபடவேண்டும்.

சுயஆய்வு:

  1. ஆற்றல் என்பது என்னவென்று உணர்ந்துள்ளேனா?
  2. உம்மை உணர நான் மேற்கொள்ளும் முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது மீட்பின் பணியை ஆற்ற எனக்கு தூய ஆவியாரின் ஆற்றலை தாரும்.


www.anbinmadal.org