arulvakku

ஜனவரி, 11 - வெள்ளி

இன்றைய அருள்வாக்கு

லூக்கா 5:12-16

"நான் விரும்புகின்றேன்”

அருள்மொழி :

'இயேசு கையை நீட்டிட் அவரைத் தொட்டு, நான் விரும்புகிரான், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று..
லூக்கா 5:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழு நோயாளியை குணப்படுத்துகின்றார். எப்படியெனில் நோயாளி இயேசுவிடம் வந்து, தூய ஆவி அவனுள் தூண்டுதல் தந்து, இறைமகனை கேட்டால் குணம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த விசுவாசம் அவனில் உந்துதல் தருகின்றது. இந்த வேளையில் தான் அவன் இயேசுவை நோக்கி "எனக்கு நீர் விரும்பும் ஆண்டவரே, நான் குணம் பெறுவேன்" என்று நம்பிக்கையோடு கேட்கின்றான். அவனது நம்பிக்கையை இயேசு உணர்ந்து அவன் நோயை குணப்படுத்துகின்றார். ஆம். இறைமக்களே! நமது உள்ளமும் அவரது உள்ளமும் ஒரே வேளையில் சங்கமமாகும்போது இறைபிரசன்னம் நம்மில் நிகழும் என்பதற்கு இது ஒரு சான்று. இதன்படி இறைமகனை நமது வாழ்வில் இணைத்திடுவோம்.

சுயஆய்வு :

  1. இயேசுவின் விருப்பத்தை என்னில் உணர்கின்றேனா?
  2. உணர்ந்து வாழ்ந்து காட்ட முயல்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் உமது விருப்பத்தின்படியே விரும்பும் வாழ்வை பெறும் வரம் தாரும்.


www.anbinmadal.org