ஜனவரி-5- சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 1: 43-51

"என்னைப் பின்தொடர்ந்து வா"

அருள்மொழி:

மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார்.
யோவான் 1:43

வார்த்தை வாழ்வாக:

என் பின்னால் 10 பேர் வந்தால் எனக்குப் பெருமை என்று கூறுகின்ற மனிதர்கள் மத்தியில் என் பின்னால் வா, நான் உன்னை பெருமைப்படுத்துவேன் என்று இயேசு கூறுகின்றார். இன்றைய காலகட்டத்தில் மனிதன் வாழ்க்கை பாதையை நிர்ணயிப்பது பட்டம், பதவி, பணம், புகழ்ச்சி என்று மார்தட்டிக்கொண்டு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை, என்னை பின்பற்றி வா என்று இயேசு அழைக்கிறார். எனவே இயேசு விட்டுச்சென்ற உண்மை, நீதி, அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்வின் பாதையாக கொண்டு வாழ்க்கையில் வளமுடன் நலமுடன் வாழ்ந்திட முயற்சிப்போம்.

சுயஆய்வு:

இயேசுவின் பாதை ஏற்றமிகு பாதை, எழுச்சிமிக்க பாதை, எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய பாதை. ஆனால் வாதைகள் நிறைந்த பாதை. அந்த அந்த வாதைகளை கண்டு பேதை ஆகி விடாமல் அவரது பாதையில் படித்திடுவோம்.

இறை வேண்டல்:

என்னை மறந்து உன்னை அறிந்து வாழ்ந்திட வரம் தாரும் இறைவா.


www.anbinmadal.org