arulvakku

ஜனவரி, 1- செவ்வாய்
அன்னை மரியாள் - இறைவனின் தாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 2:16-21

"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.."

அருள்மொழி :

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
லூக்கா 2:18-19

வார்த்தை வாழ்வாக:

புத்தாண்டின் முதல் நாளை பொலிவுடன் தொடங்கும் நாம் அன்னை மரியாளை இறைவனின் தாயாகவும,அகில உலகத்தின் தாயாகவும் தாயாம் திருச்சபையானது மகுடம் சூடி மகிழ்கின்றத. தாய்மை பெண்ணினத்திற்கு கடவுள் கொடுத்த வரம். தாய்மை மனித வரலாற்றின் மணிமகுடம் .தாய்மை பெண்ணினத்தை அலங்கரிக்கும் மணிமுடி .அன்னை மரியாள் பெண்களுள் பேறு பெற்றவளாகவும், இரண்டாம் ஏவாளாகவும் மற்றும் கடவுளின் தாயாக மாறும் பேற்றினையும் பெறுகின்றாள.தம் வார்த்தையாலும், வாழ்வாலும் தாய்மையை கொண்டாடுகிறாள் . அவளின் மணிமகுடத்திற்கான காரணம் கீழ்ப்படிதலும் தாழ்ச்சியும் தான்."ஆம்" என்ற வார்த்தையை தியானிக்கும் நற்செயல் அவளை கடவுளின் தாயாகும் பேறு பேற்றினை அளித்தது. இயேசுவையும் அவரைப் பற்றிய செய்தியையும் பார்த்து, கேட்டு ,வியப்படைந்த வர்கள் சிலர், தியானித்தவர்கள் சிலர் . இடையர்கள் வியப்புற்றதால் கடவுளை போற்றி புகழ்ந்து மகிழ்ந்தார்கள். அன்னை மரியாள் வியப்புற்ற தோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி தியானித்தாள், இறுதிவரை நிலைத்திருந்தாள், கடவுளையே சொந்தம் ஆக்கினாள் ,கடவுளின் தாயானாள்.

சுயஆய்வு :

அன்னையை பின்பற்றும் நாம் கடவுளின் செயல்களைப் பார்த்து வியப்படைகிறோம். போற்றிப் புகழ்கின்றோம் ஆனால் தியானிக்க , உள்ளத்தில் ஏற்க தவறி விடுகின்றோம். நம்முடைய மகிழ்ச்சி போற்றுதலுடன் முடிவடையாமல் அதை தியானித்து வாழ்வாக்கி வாழ முயற்சிக்கின்றோமா?

இறைவேண்டல்:

எல்லாம் வல்ல இறைவா,உன் தாயைப்போல் நாங்களும் எங்கள் வாழ்வை முழுவதும் உமக்காக அர்ப்பணித்து, கிறிஸ்துவை பிறருக்கு அறிக்கையிட வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org