ஆசிர்வாதம்

திருமதி அருள்மேரி செல்வி

blessingsநாம் ஆசிர்வாதத்தின் மக்கள். நம்முடைய ஆண்டவர் ஆசிர்வாதத்தின் கடவுள். ஆசிர்வதிக்கவே நான் வந்தேன் என்றார் கடவுள் (எபிரேயர் 6:14). உண்மையாக நம்மை ஆசிர்வதிக்கிறார். ஆசிர்வாதத்தைப் பெறுவதும், பெறாமல் போவதும் நம்மிடம் தான் இருக்கிறது. (தொநூ 12:1-3) ஆபிராகாமை நோக்கிக் கூறிய இறைவன் இன்று நம் அனைவரைக்கும் அவ்வாறே கூறுகிறார். நம்மைப் பெரிய இனமாக ஆசைப்பட்ட இறைவனுக்கு நாம் ஒன்று போதும் இரண்டு போதும் என்று பட்டியலிட்டு அவருக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளைத் தடைச் செய்து ஆசிரை இழக்கக் காரணம் ஆனோம்.

எப்படிச் சிறப்புச் செய்வேன் என்றவருக்கு அவருக்கே தெரியாத வாயில் நுழையாத பல விநோதப் பெயரை வைத்து, அங்கும் பெயர் சிறப்புறச் செய்யவிடாமல் நாம் தடுத்த விட்டோம். உனக்கு ஆசி வழங்குவேன், ஆபிராகமை போல் உண்மையோடும் நேர்மையோடும் நம்பிக்கையோடும் இருந்தால்! அதிலும் தவறி, அந்த ஆசிரையும் இழந்த நிற்கிறோம். கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவில் வாழ்பவன் கிறிஸ்தவன். நாம் எப்படி வாழ்கிறோம், நமக்கே தெரியும். எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்.

புதிய ஆண்டு, புதிய ஆசிரை பெற தகுதியாக்குவோம். எந்நாளும் அது நம்மில் நிலைத்து நிற்க பெரும் முயற்சி எடுப்போம். (திருப்பாடல் 6:5-11) ஆண்டு முழுவதும் ஆசிர்வதிக்கிற நம் ஆண்டவர் வழியில் நாம் நடப்போம். வளம் செழித்து வாழ்வோம். (ஒசேயா 6:1) நம்மை குணமாக்கி, காயங்களைக் கட்டி வழிநடத்தவார். அவரிடம் திரும்பும்போழுது நம் ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார். அவர் மாவீரர், மீட்பு அளிப்பவர். நம் பொருட்டு மகிழ்ந்து களிகூறுபவர். (செப்பனியா 3:17) மனம் வருந்தி மாறி அவரை ஏற்றுக் கொள்ளும் போது அவர் நம்மை என் மக்கள் இனிஒரு போதும் நிந்தைக்குள்ளாகமாட்டார்கள். அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன் என்கிறார். (யோவேல் 2:27) (ஆமோஸ் 5:14.)

dance with jesus

நம் வாழ்க்கையில் நன்மைகளை செய்து தீமையை நாடாமல் இருந்தால் நம் ஆண்டவர் நம்மோடு இருப்பார். நம்மை உரிமை சொத்தாக ஏற்றுக் கொண்ட ஆண்டவர் கூறுகிறார். (அபக்கூக்கு 2:17,18,19) எது நடந்தாலும் ஆண்டவர்க்கு நன்றி. நடக்கவிட்டாலும் அது ஆண்டவருக்கு நல்லதல்ல, அதனால் இல்லை என்று சொல்லி எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி வாழுவோம். அப்பொழுது தான் நாம் ஆண்டவரில் களிகூறமுடியும். அப்போது (ஆமோஸ் 9:13) பஞ்சம் என்பது நாட்டில் வராமல் ஆண்டவருக்கு கீழ்படிந்த மக்களை அவர் வழி நடத்துவார். அவர் வழியில் நாம் நடக்கும் போதும் இன்று முதல் உன்னை ஆசிர்வதிப்பேன் என்று சொல்லி முழுமையாக நமக்கு ஆசிரை அளிப்பார் என்ற நம்பிக்கையோ அவரில் வாழ்வோம். ஆசிரை பெற்று மகிழ்வோம்.